கொரோனா அச்சுறுத்தலால் ‘இந்த’ பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் இந்திய வீரர்!! - Seithipunal
Seithipunal


மீபத்தில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை பீதி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த வைரஸை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடக்கும் நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் என்று விளையாட்டுப் போட்டிகள் உட்பட உலகில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கையாக சில அறிவுரைகளையும், வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும், வெளியாட்களிடம் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, கை குலுக்குவது, ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது போன்றவை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். விளையாடும்போது பந்தில் எச்சில் தொட்டு தேய்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், இனி அந்த பழக்கத்தை நிறுத்தி கொள்வேன் என்று இந்திய வீரர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் எங்களுடன் மருத்துவ குழு எப்போதும் இருப்பதாகவும் அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படி செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhuvaneshwar kumar says reduce use saliva to shine ball


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->