பிசிசிஐ இன்று வெளியிட்ட ஒப்பந்தப் பட்டியல்! டாப் கியரில் ஜடேஜா, கேஎல் ராகுல் நிலை பரிதாபம்! - Seithipunal
Seithipunal


பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்தப் பட்டியலில் அறிவிப்பின்படி, 

விருத்திமான் சாஹா, ஹனுமா விஹாரி மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய மூவரும், டெஸ்ட் அணியில் தங்கள் இடத்தை இழந்துள்ளனர்.

சேதேஷ்வர் புஜாரா தனது கிரேடு பி ஒப்பந்தத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அஜிங்க்யா ரஹானே பார்ம் மற்றும் அவரது டெஸ்ட் இடத்தை இழந்ததால் நீக்கப்பட்டுள்ளார். நவம்பர் 2021 இல் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ரஹானே ஆடியுள்ளார். இஷாந்த் சர்மாவும் இதே நிலையில் உள்ளார்.

கடந்த முறை தக்கவைக்கப்படாத குல்தீப் யாதவ், கிரேடு சி ஒப்பந்தம் பெற்றுள்ளார். 
கே.எல்.ராகுல் ஏ-வில் இருந்து பி-க்கு குறைந்துள்ளார்.

கிரேடு A+ (INR 7 கோடி): ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா நீடிக்கின்றனர். இதில், ரவீந்திர ஜடேஜா கிரேடு A+ ஒப்பந்தத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளார்.

கிரேடு ஏ (INR 5 கோடி): ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த், அக்சர் படேல் நீடிக்கின்றனர். (ஹர்திக் பாண்டியா, அவர் கிரேடு C இலிருந்து கிரேடு ஏ க்கு மாறியுள்ளார்)

கிரேடு பி (INR 3 கோடி): சேதேஷ்வர் புஜாரா, KL ராகுல், ஷ்ரேயாஸ் லையர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில் நீடிக்கின்றனர். (சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் கிரேடு சி-யில் இருந்து கிரேடு பி-க்கு உயர்ந்துள்ளனர்.)

கிரேடு C(INR 1 Cr): உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI Repot KL Rahul And Jadeja


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->