ரோஹித் செஞ்சுரி! பிசிசிஐ தலைவர் கங்குலி வாழ்த்து!  - Seithipunal
Seithipunal


தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்ற வரும் இந்திய வங்கதேச அணிகள் இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டியானது  இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சிறப்பு வாய்ந்த ஒரு போட்டியாகும். 

ஏனெனில் இது அவர் 20 ஓவர் போட்டியில் விளையாடும் 100 ஆவது சர்வதேச போட்டியாகும். இந்திய வீரர்களில் இந்த இலக்கை இது வரை யாரும் எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 98 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

தற்போது அந்த சாதனையை முறியடித்து இந்தியாவின் சார்பில் 100 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். வீராங்கனைகள் தரப்பில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் 100 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

100வது போட்டியில் விளையாடி வரும் ரோகித் சர்மாவுக்கு தற்போதைய பிசிசிஐயின் தலைவரும் இந்திய முன்னாள் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். 100 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட்க்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என வாழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேசம் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI president ganguly wishes to rohit sharma for 100th T20 match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->