மூன்று மாதங்களுக்கு பிறகு தண்டிக்கபட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்! சோகமான கேளிக்கை!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கும் முன் பிரபல தனியார் தொலைக்காட்சி கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்து கொண்டு பேசிய போது, பாண்டியா பெண்களை அவதூறாக பேசியதாக பெரும் சா்ச்சை உருவானது. ராகுல் உடனிருந்தார் என்பது குற்றச்சாட்டாகி போனது. 

இந்த சர்ச்சை பலமான பின்விளைவை ஏற்படுத்தும் என அப்போது யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஹா்திக் பாண்டியா தனது செயலுக்காக மன்னிப்பு தொிவித்தார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய ஹர்திக் பாண்டியா மட்டும் அல்லாது அவருடன் சென்ற கே.எல்.ராகுலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நோட்டீஸ் அனுப்ப, அவரும் அவசர அவசரமாக மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்பினார். 

ராகுல், ஹர்திக் பாண்டியாவின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்,  ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இருவரும் அணியில் இருந்து உடனடியாக சஸ்பேண்ட் செய்யப்பட்டு நாடு திரும்ப பணிக்கப்பட்டனர். 

விசாரணை முடியும் வரை இருவரும் கிரிக்கெட் தொடர்பான எதிலும் பங்குபெறக்கூடாது என கடுமையான உத்தரவிட  இருவரும் பேரதிர்ச்சியுடன் நாடு திரும்பினார்கள். இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளுக்கு பின் முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி என்று அப்போது பரபரப்பாக கூறப்பட்டது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி நீயூசிலாந்து பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவர்களுக்கு மாற்றாக விஜய் ஷங்கர், ஷுப்மன் கில் நீயூசிலாந்து பறந்துவிட்ட நிலையில் ராகுல், பாண்டியா மீதான தடையினை தளர்த்த வேண்டும் என பிசிசிஐ தலைவர் சிகே கண்ணா கடிதம் ஒன்றினை எழுதினார்.

விசாரணை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் அவர்களை போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என  கோரிக்கை வைத்திருந்தார்.  இந்நிலையில் இருவர் மீதான தடையும் நீக்கி உத்தரவிடப்பட்டது. விசாரணை நடைபெற்றாலும் அவர்கள் தொடர்ந்து விளையாடலாம் என பிசிசிஐ அறிவித்தது. 

இதற்கிடையே ஹர்டிக் பாண்டியா மட்டும் நியூசிலாந்து செல்வதற்கு உத்தரவிடப்பட்டது. லோகேஷ் ராகுல் நியூசிலாந்துக்கு அனுப்பபடமால் திருவனந்தபுரம் செல்வதற்கு உத்தரவிடப்பட்டது. அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்திய ஏ அணியினருடன் இணைந்து விளையாடினார். 

இந்நிலையில் ராகுல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவருக்கும் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து BCCI உத்தரவிட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் அபராதம் செலுத்த தவறினால் அவர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

English Summary

bcci fined lokesh rahul and hardik pandya


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal