ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி.! - Seithipunal
Seithipunal


மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்க வைத்துக் கொண்டது.

நடப்பு மகளிர் ஆஷஸ் கோப்பைக்கான 3 டி20, ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியும் மூன்றாவது போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டன. பின்னர் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது. 

இதனையடுத்து கோப்பபையை கைப்பற்ற வேண்டுமானால் எஞ்சியிருந்த மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடி சூழல் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது.

பின்னார் இரண்டாவதாக ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி 45 ஓவர்கள் விளையாடி 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் ஆட்டங்களில் எஞ்சியிருக்கும் இரண்டு ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் தொடரை சமன் செய்ய மட்டுமே முடியும். கடந்த 2013-14 ஆண்டு முதல் மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் கோப்பை ஆஸ்திரேலிய அணியிடமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia won Ashes series


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->