உலகக்கோப்பையில் நடைபெற இருந்த அரிய நிகழ்வு! தடுத்து நிறுத்திய இந்தியா!  - Seithipunal
Seithipunal


தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12 ஆவது உலகக் கோப்பை போட்டியில் இன்னும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. லீக் சுற்றுகளில் முடிவில் புள்ளி பட்டியலில் முதல்  4 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. 

இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை அரையிறுதிப் போட்டியை பொறுத்தவரை இதுவரை அதிகபட்சமாக நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் தலா எட்டு முறை அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு அணிகளும் ஒரு முறை கூட நேருக்கு நேர் சந்திக்க வில்லை என்பதுதான் ஆச்சரியமான ஒன்றாகும். 

இதுவரை இரண்டு அணிகளும் ஒரே நேரத்தில், அரை இறுதிக்கு தகுதி பெறுவது இந்த உலக கோப்பையுடன் 5வது முறையாகும். இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் தான் ஆஸ்ட்ரேலியா மோதும் என்ற நிலை இருந்த நிலையில், அதனை இந்திய அணியின் இறுதி லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, இந்த முறையும் அவ்வாறு நடைபெறாமல் தடுத்து விட்டது. 

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை 1975 1979 1992 1999 2007 2011 2015 2019 என்ற எட்டு முறையும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய அணியும் 1975 1987 1996 1999 2003 2007  2015 2019 அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் 1975 1999 2007 2015 2019 என  ஐந்து முறை இரண்டு அணிகளுமே ஒரே நேரத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இரண்டு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட நேருக்கு நேர் மோதிக் கொள்ளவில்லை என்பதுதான் வினோதமான ஆச்சரியம். இந்திய அணி இறுதி லீக் போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக இந்த முறையும்  நடைபெறாமல் போனது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia New Zealand semi final meetings


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->