உலக கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் நீக்கம்.! உத்தேச பட்டியலை வெளியிட்டது ஆஸ்திரேலியா.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மிங்கஸ்க்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் அவர் தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் உலகக் கோப்பையில் நடக்கவிருக்கும் ஒரு நாள் சுற்றுப்பயணங்களில் ஆஸ்திரேலியாவை பேட் கம்மின்ஸ் வழிநடத்த உள்ளார். இதனால் அவர் ஆறு வாரங்களுக்குள் காயத்திலிருந்து குணமடைய வேண்டும்.

இல்லாவிடில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் டி20 மற்றும் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக செயல்படுவார்.

அதேபோன்று தனது மனைவியின் மகப்பேறு விடுப்பு காரணமாக கிளென் மேக்ஸ்வெல் தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் இருந்து மார்னஸ் லாபுஷாக்னே நீக்கப்பட்ட நிலையில், ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி, லெக்ஸ்பின்னர் தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில நடைபெற உள்ள 2023 உலகக் கோப்பை ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து இருந்து மார்னஸ் லாபுசேன் நீக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, 18 வீரர்கள் கொண்ட உலகக் கோப்பை காண உத்தேச பட்டியலை ஆஸ்திரேலியா பணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியODI அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அபோட், ஆஷ்டன் அகர் , அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia named their preliminary 18member squad for 2023 ODI World Cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->