ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதல்.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

சூப்பர்-4 சுற்றில் 6 போட்டிகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் இறுதிப் போட்டி நடைபெறும். 

இதில், குரூப் சுற்றில் விளையாடிய பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர்-4 சுற்றில் மீண்டும் ஒருமுறை மோத உள்ளன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது சந்திப்பு நாளை (செப்டம்பர் 4ஆம் தேதி) துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

முந்தைய போட்டியில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவும் - பாகிஸ்தானும் மீண்டும் மோத உள்ளதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup group 4 india vs pakistan match tomorrow


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->