#Ahes2023 || இங்கிலாந்து ரசிகரிடம் எகிறிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள்.. பரபரப்பான லாட்ஸ் மைதானம்!! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி ஜூன் 16ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது டெஸாட் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை எடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு சுரண்டது. 

இதனை தொடர்ந்து மூன்றாவது இன்னிசை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி வெறும் 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.

கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் தவிர அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. பென் டக்கெட் 83 ரன்களுக்கு ஆட்டம் இணைந்ததால் இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் உணவு இடைவேளையின் பொழுது மைதானத்தை விட்டு வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இங்கிலாந்து ரசிகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா வீரர்களை இங்கிலாந்து ரசிகர் ஒருவர் உடல் ரீதியில் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு ஆஸ்திரேலியா வீரர்களும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா வீரர்கள் உடல் ரீதியாக தொடர்பு கொண்டு துஷ்பிரயோகம் செய்த நபர் குறித்தும், அசாதாரண சூழ்நிலை குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரிவான விசாரணையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Argument between Australia players and England fans at the lords


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->