ஓய்வு பெறும் முடிவை திரும்பப்பெற்றார் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றனர். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 18ம்) இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்தது. அதன் பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

அதில், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வீழ்த்தி, உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு பிறகு மெஸ்ஸி அளித்த பேட்டியில், "நான் அர்ஜென்டினா அணியிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை. இன்னும் நான் சாம்பியனாகவே விளையாட விரும்புகிறேன். உலகக் கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எனது கடைசி உலககோப்பையின் இறுதிப்போட்டியை வெற்றியுடன் முடித்தது மகிழ்ச்சியை தருகிறது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Argentine player Messi has withdrawn his decision to retire.


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->