தோனியை ஏலத்தில் விடுங்கள்.. சி.எஸ்.கே டீமுக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை.! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறியது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும், கடந்த 2010, 2011 மற்றும் 2018 ஆம் வருடங்களில் என 3 முறை ஐ.பி.எஸ் போட்டியில் வெற்றிவாகையை சூடினர். 

இந்த வருட ஐ.பி.எல் போட்டிகளில் மொத்தம் 14 போட்டிகளில் கலந்துகொண்ட சி.எஸ்.கே அணி 12 புள்ளியுடன் ஏழாவது இடத்தில் இருந்தது. சுரேஷ் ரைனா மற்றும் ஹர்பஜன் சிங் இந்த வருடத்தில் விளையாடவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து கூறுகையில், " மெகா ஏலத்தில் சென்னை அணி தோனியை தக்க வைக்க கூடாது என்று கூடாது " என்று கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், " தோனியை சி.எஸ்.கே அணி தக்க வைத்தால் ரூ.15 கோடி இழப்பீடு ஏற்படும். இதற்கு பதிலாக தோனியை பொது ஏலத்தில் விட்டுவிட்டு, போட்டிக்கான உரிமை கார்டு மூலமாக அவரை வாங்கிக்கொள்ளலாம். இதனால் அணியினுடைய பணம் சேமிக்கப்படும். நல்ல அணியை நாம் உருவாக்கலாம்.

மெகா ஏலத்திலேயே 3 வருடம் தோனியை தக்கவைத்து கொண்ட அணியாக சி.எஸ்.கே இருக்கும். தோனியை அடுத்த ஐ.பி.எல் போட்டியில் வைத்திருந்த, ரூ.15 கோடியை கொடுக்க வேண்டியிருக்கும். பின்னர் 2022 ஆவது சீசனிலும் அவர் விளையாடினால் அந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். தோனியை ஏலத்தில் விட்டுவிட்டு மீண்டும் எடுத்தால், அது நல்ல பலனை கொடுக்கும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Akash Shopra want Auction for Dhoni


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->