டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய இலக்கை அடைந்த அஜிங்கிய ரஹானே! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி , இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே , லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469/10 ரன்களை குவித்ததையடுத்து, களமிறங்கிய இந்திய அணி ,அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில்,  ரஹானே மற்றும் ஷர்துல் தாகூரின் , சிறப்பான ஆட்டத்தால் 296 ரன்கள் சேர்த்து,  ஆஸ்திரேலியா அணியை விட 173 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

இந்திய அணி வீரர் , அஜிங்கிய ரஹானே உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப், இறுதிப் போட்டியில் 69 ரன்களை,  அவர் எட்டியபோது டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களைப், பூர்த்தி செய்த 13வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் 141 இன்னிங்ஸ் விளையாடிய , அஜிங்கிய ரஹானே தற்போதே 5, 020 இயற்கை  குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajinkya Rahane reached 5000 runs in Test cricket


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->