IND vs SA : இந்திய அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள்.? - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை எடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணி 19.1 ஓவரில் 212 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ரிஷப் பண்ட் கேப்டன்சி தான் என கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தவில்லை. ஐபிஎல் 15 வது சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த சஹலுக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததால், ஹலுக்கு கொடுக்கப்பட்டது. மேலும் ஆல்ரவுண்டர் ஆஅக்சர் படேலுக்கு 4 ஓவர் கொடுத்தார். இப்படிப் பௌலர்களை சிறப்பாக கையால்தான் தோல்விக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த இரண்டு ஸ்பின்னர்களும் லெக் ஸ்பின்னர்கள்தான். பென்சில் அமைந்திருக்கும் ரவி பிஷ்னோயும் லெக் ஸ்பின்னர். ஆனால் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா மட்டுமே ஆப் ஸ்பின்னர் ஆக உள்ளார். இதனால் இனிவரும் 4 போட்டியிலும் சஹலுடன் தீபக் ஹூடாவையும்,  ஆவேஷ் கானுக்கு மாற்றாக அர்ஷ்தீப் சிங்கையும் களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரிஷப் பண்ட் இடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்திய அணியின் உத்தேச பட்டியல் : ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2nd t20 match indian team may be 2 change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->