உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. முக்கிய வேகப்பந்து வீச்சாளருக்கு இடமில்லை.! - Seithipunal
Seithipunal


2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. மொத்தமாக 45 போட்டிகள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளது. 

நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி போட்டிகள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளது. நவம்பர் 13ம் தேதி இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இதனையடுத்து 20 ஓவர் உலக கோப்பைக்கான அணி வீரர்கள் மற்றும் ஜெர்சியை அந்தந்த அணிகள் அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2022 உலகக் கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடம் மில்ன், ஃபின் ஆலன், பிரேஸ்வெல் போன்றோர் நியூசிலாந்து அணியில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாகப் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வீரர் கைல் ஜேமிசன் இந்த அணியில் இடம்பெறவில்லை. 


2022 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கிளென் பிளிப்ஸ், மார்க் சேப்மன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், டிம் செளதி, லாகி ஃபர்குசன், ஆலம் மில்ன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 T20 World Cup newzealand team announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->