ஆடி மாதத்தில் முளைப்பாரி எடுப்பது ஏன்.? தெரிஞ்சுக்கலாம் வாங்க.! - Seithipunal
Seithipunal


ஆடி மாதத்தில் முளைப்பாரி எடுப்பது ஏன்?

பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.


வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்.

பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். 'முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள்.

ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why take mulaipari in Aadi month


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->