செத்துப்போனவர்கள் கனவில் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை.

அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் காரணங்களும் கூறப்படுகின்றன.

இறந்தவர்கள் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு காரணம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஏதும் குறைகள் இருந்தால், அவர்களை பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் கனவில் வருவது போன்று தோன்றலாம்.

ஒருவரது இறப்பு உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் கனவு வரும். நீங்கள் கனவில் தொடர்ந்து அவர்களது குரலை கேட்டுக் கொண்டே இருப்பது, உங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை உணர்த்துகின்றது.

ஆன்மீக ரீதியாக சொல்லப்போனால், இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்குமாம். குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும், உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு போன்றவை ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம், வஸ்திர தானம் செய்யலாம்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why deadly person coming dream


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal