ரெங்கா ரெங்கா.. வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு.! - Seithipunal
Seithipunal


பூலோக வைகுண்டம் எனப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும். 

கடந்த மாதம் 27ந் தேதி வெகுவிமர்சையாக தொடங்கி இந்த விழா. நாள்தோறும், மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ரத்தின அங்கி அணிந்த நம்பெருமாள் கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசலைக் கடந்தபோது ரெங்கா ரெங்கா என பக்தர்கள் பக்தியுடன் முழக்கமிட்டனர்.

தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.

வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

அதேபோல, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கு திருப்பாவை பாசுரங்களுடன் ஆகம முறைப்படி ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaikunda yeagathesi in trichy kovil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->