ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு; திருப்பதி தேவஸ்தானம்..! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் ஜூலை மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், இதர தரிசன டிக்கெட்டுகள் இன்று  ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை ஜூலை மாதம் வழிபட இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சேவை டிக்கெட்டுகளின் லக்கி டிப் பதிவுக்கு இன்று காலை 10 மணியில் இருந்து 21-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

லக்கி டிப் மூலம் இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களுக்கு 21 முதல் 23-ந்தேதி மதியம் 12 மணி வரை பணம் செலுத்தினால் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபலங்கார சேைவ டிக்கெட்டுகள் 22-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். உற்சவ சேவைகளுக்கான ஜூலை மாத ஒதுக்கீடு தரிசன ஸ்லாட்டுகள் 22-ந்தேதி மாலை 03 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்கள், காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.  அத்துடன், வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன ஒதுக்கீடு 23-ந்தேதி மாலை 03 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கட்டுகள் (ரூ.300 கட்டணம்) 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருப்பதி, திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதி அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 03 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளமான Https://ttdevasthanams.ap.gov.in தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நாளுக்கு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupati Devasthanams releases online Arjitha Seva tickets for the month of July


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->