சென்னைக்கு வரும் திருப்பதி ஏழுமலையான் கோவில்!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இருந்து பக்தர்கள் அதிகமாக திருப்பதிக்கு வருகை தருவதால், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் கோவில் கட்டும் திட்டம் குறித்து திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

தமிழகத்தில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கின்றனர். இதனால், சென்னையில் மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட  திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ள்ளதாகவும். இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கலந்து ஆலோசிக்க உள்ளோம். விரைவில் சென்னையில் கோவில் கட்டும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்குவோம் என தெரிவித்தார். 

ஏற்கனவே கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில் கோவில் ஒன்றை கட்டியுள்ளோம். இருந்தாலும் சென்னையில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட தற்போது முடிவுசெய்துள்ளோம், இதற்கான இடம் குறித்த விவரங்களை தேவைப்பட்டால் ஆந்திர முதல்வர், தமிழக முதல்வரிடத்தில் பேசுவார் என திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டிதெரிவித்தார். 

திருப்பதி தேவஸ்தான தலைவர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து பதிலளித்த, சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் கிருஷ்ணா ராவ், சென்னையில் பெரிய இடம் கிடைப்பது மிக கடினமான ஒன்று. சில வருடங்களுக்கு முன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழுமலையானுக்கு பெரிய கோவில் கட்ட இடம் அளிப்பதாக உறுதியளித்தார்.மீண்டும் நாங்கள் இடத்திற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirupathi temple in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->