இன்றைய தினப்பலன்கள்... எந்த ராசிக்கு வரவு? எந்த ராசிக்கு செலவு? - Seithipunal
Seithipunal


மேஷம்:

மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறிது மந்தநிலை காணப்படும். செல்வச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்:

முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்சனைகளை அமைதியாக கையாளவும். மற்றவர்கள் கூறும் செய்திகளின் உண்மையை அறிந்து செயல்படவும். சக ஊழியர்களிடம் பேசும்போது நிதானத்துடன் இருப்பது நன்மையை தரும்.

மிதுனம்:

குடும்பத்தில் வாழ்க்கை துணையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகளும் நண்பராவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனோதைரியம் உண்டாகும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்:

எதிர்பாலின மக்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் ஏற்படும். பணி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சனைகள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்:

நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். வாரிசுகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

கன்னி:

குடும்பத்தில் சுபகாரியங்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். முடியாத சில காரியங்களை செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படலாம்.

துலாம்:

மறைமுக எதிர்ப்புகள் விலகும். மனதில் நினைத்த செயல்பாடுகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விளையாட்டுகளில் விழிப்புணர்வு வேண்டும்.

விருச்சகம்:

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகள் தாமதப்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த பணத்தட்டுப்பாடு குறையும். வாக்குவன்மையால் எண்ணிய செயல்பாடுகளை செய்து முடிப்பீர்கள்.

தனுசு:

மனதில் திடீர் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றமான வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உடைமைகளை கவனமாக பாதுகாத்து கொள்வது நல்லது.


மகரம்:

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீண் அலைச்சல்களும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். 

கும்பம்:

எதிர்ப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சேர்க்கையும், உதவியும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலைகள் நீங்கும். சுபச்செய்திகளின் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

மீனம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்களை தரும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 24 rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->