இன்று மிருகசீரிஷம் : கீர்த்தி | பூசம் : பொருள் வரவு | மூலம் : மகிழ்ச்சி... உங்களுக்கு? - Seithipunal
Seithipunal


மேஷம்:

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். தொழிலில் செய்த புதுவிதமான முயற்சிக்கான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.

ரிஷபம்:

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். தந்தைவழி தொழிலால் நற்பெயர் கிடைக்கும். தெய்வ காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கறிஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்தி உண்டாகும்.

மிதுனம்:

பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை செய்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

கடகம்:

உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவிவழி உறவினர்களின் மூலம் பொருள் வரவு மேம்படும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள்.

சிம்மம்:

குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி:

கால்நடைகளின் மூலம் எண்ணிய இலாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். சந்தேக உணர்வினால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும்.

துலாம்:

தொழிலில் புதுவிதமான யுக்திகளால் எண்ணிய வெற்றி உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சகம்:

முயற்சிக்கேற்ற இலாபம் உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். சகோதர உறவுகளால் மேன்மை உண்டாகும். மற்றவர்களுக்கான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அதிகார பதவியில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கவும்.

தனுசு:

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அதை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

மகரம்:

பிள்ளைகள் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் சேமிப்பு மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பான எண்ணங்கள் தோன்றும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். 

கும்பம்:

தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்பாட்டிற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மீனம்:

உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 22 rasi palan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->