முன்னோர்கள் அன்று கூறியதை இன்று நிரூபித்த விஞ்ஞானிகள்!! திகைக்க வைக்கும் ஆய்வு!! - Seithipunal
Seithipunal


பழங்காலத்தில் நம் நாட்டு முனிவர்களும், சித்தர்களும் கண்டறிந்த ஓர் விஷயம் தான் மூச்சுப்பயிற்சி. ஆனால், அதற்கு அறிவியல் உலகம் இன்று தான் விளக்கம் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு மூச்சை மையப்படுத்தி தியானம் செய்வதால் மன ஒருமைப்பாடு, நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் என்பது தான் ஆன்மிக பயிற்சிகளின்அடிப்படை மற்றும் சித்த வைத்தியம். 

மேற்கத்திய விஞ்ஞானத்தால் மூச்சை கட்டுப்படுத்துவது, மூச்சின் மீது கவனம் வைத்து தியானிப்பது, ஆகிய பயிற்சிகளின்போது இத்தகைய மாற்றம் ஏற்படுவது ஏன் என்பதை அண்மைக்காலம் வரை விளக்க முடியாமல் இருந்தது. 

அயர்லாந்திலுள்ள டப்ளின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இது குறித்து ஆராய்ந்த போது மூளையில் சுரக்கப்படும் 'நோராட்ரினலின்' என்ற வேதிப்பொருள்தான் இந்த மன ஒழுங்கிற்கு காரணம் என கண்டறிந்துள்ளனர். இவ்வாறு தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றினை செய்யும் போது நோராட்ரினலினின் சுரப்பு சீராக இருக்கிறது என்றும், 

நோராட்ரினலின் அதிகம் சுரக்கும் பட்சத்தில் கவனச் சிதறல் ஏற்படுகிறது. இது குறைவாக சுரந்தால் மனம் மந்தமடைகிறது என்றும், இந்த வேதிப்பொருளானது உடலில் சரியான அளவில் சுரக்கும்பட்சத்தில் மன நிலை சீராகி, மன ஒருமைப்பாடு, நேர்மறை சிந்தனைகள் ஆகியவை ஏற்படுவதாக தெரிகிறது. 

நோராட்ரினலினை கட்டுப்படுத்தக்கூடியவையாக மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் போன்றவை இருப்பதே இந்த நல்ல விளைவுகளுக்குக் காரணம் என கண்டுபிடித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

scientist says about breathing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->