சபரிமலை கோவில் சன்னிதானத்தில் காலணி அணிந்த அதிகாரி...! கடுமையான நடவடிக்கை எடுத்த சபரிமலை காவல்துறையினர்...!
Sabarimala police take strict action against officer wearing shoes Sabarimala temple sanctum
நேற்று முன்தினம் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ் என்ற காவல் அதிகாரி, கோவிலில் சன்னிதானத்திற்கு அருகில் காலில் காலணி அணிந்துகொண்டு நின்றுள்ளார்.
இதனை செல்போனில் வீடியோ எடுத்த பக்தர்கள் சிலர், அதனை இணையத்தளத்தில் பதிவிட்டனர்.அதில்,சபரிமலையின் புனிதத்தை மீறியதாக காவல் அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சபரிமலை காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 'ஸ்ரீஜித்' துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் காவல் அதிகாரி ராஜேஷ் சன்னிதான பகுதியில் காலணி அணிந்து நின்றது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சபரிமலை பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரை அங்கிருந்து முகாம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டார்.இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Sabarimala police take strict action against officer wearing shoes Sabarimala temple sanctum