தினம் ஒரு திருத்தலம்... வருடம் முழுவதும் பக்தர்களுக்கு காட்சி தரும் ஐயப்பன்..!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் :

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் பற்றி பார்க்கலாம் வாங்க...

கோயில் எங்கு உள்ளது :

சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியான ராஜா அண்ணாமலைபுரத்தில் அருள்மிகு ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்புகள் :

இத்தலத்தில் சபரிமலையில் உள்ளதை போலவே கன்னி மூல கணபதி, மாளிகைபுரத்து அம்மன், நாகராஜ சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளது.

அருள்மிகு ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், வருடம் முழுவதும் மூலவர் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

இருமுடி கட்டிக்கொண்டு, கோயிலுக்கு வருபவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 18 படிகளில் ஏறி, சுவாமியைத் தரிசனம் செய்யலாம். இவ்வாறு இத்தலத்தில் 18 படிகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

இருமுடி இன்றி வருபவர்களுக்கெனத் தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

வேறென்ன சிறப்பு :

40 அடி உயர கொடி மரமும், சுமார் 1,500 பேர் அமர்ந்து தரிசிக்கும் வகையிலான பிரம்மாண்டமான தியான அறையும் உள்ளது.

கார்த்திகை மாதம் துவங்கியதுமே தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகின்றனர்.

திருவிழாக்கள் :

தை மாதம் 1ஆம் தேதியான மகர ஜோதித் திருநாளில், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்தும், 18 படிகளில் தீபமேற்றியும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கார்த்திகை மாதத்தில் சிறப்பான வழிபாடு மற்றும் பிரம்மோற்சவம் போன்றவை நடைபெறும்.

பிரார்த்தனைகள் :

இத்தலத்தில் நினைத்த காரியம் நிறைவேறவும், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களை பெறவும் வழிபாடு செய்யலாம்.

நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க இங்குள்ள ஐயப்பனை வழிபடலாம்.

நேர்த்திக்கடன்கள் :

இத்தலத்தில் வேண்டுதல் நிறைவேறியவுடன் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்தும், மாலை அணிவித்தும், ஆராதனைகள் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajah annamalaipuram iyyappan temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->