கிழமைகளில் வரும் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதங்கள்! - Seithipunal
Seithipunal


பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த காலமாகும். பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாட்டு முறையே பிரதோஷ வழிபாடு என்றும், அன்றைய தினம் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் ஈசனின் பரிபூரண அருள் கிடைக்கும். எந்த கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம்... என்ன பலன் தரும்?

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் :

ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷம் 'ஆதிப்பிரதோஷம்" ஆகும். இந்த கிழமையில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இதனால் சூரியபகவானின் அருள் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.

திங்கட்கிழமை பிரதோஷம் :

திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷமாகும். இப்பிரதோஷ பூஜையின் மூலம் திருமணத்தடை நீங்கும். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு, கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

செவ்வாய்க்கிழமை பிரதோஷம் :

செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் 'மங்கள வாரப்பிரதோஷம்" ஆகும். செவ்வாய்க்கிழமையில் ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும், நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். 

புதன்கிழமை பிரதோஷம் :

புதன்கிழமையில் வரும் பிரதோஷம் 'புதவாரப்பிரதோஷம்" ஆகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும். சுபிட்சம் உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வியாழக்கிழமை பிரதோஷம் :

வியாழக்கிழமையில் வரும் பிரதோஷம் 'குருவாரப்பிரதோஷம்" ஆகும். குருப்பார்க்க கோடி நன்மையாகும். சிவாலயங்களில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவனை வழிபாடு செய்வதால் அவர்களது வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும்.

வெள்ளிக்கிழமை பிரதோஷம் :

வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'சுக்கிர வாரப்பிரதோஷம்" ஆகும். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், மறக்காமல் சிவ தரிசனம் செய்ய வேண்டும். இதனால் பகைகள் விலகும். குடும்ப பாசம் கூடும்.

சனி மஹாப்பிரதோஷம் :

எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக்கிழமையில் வரும் பிரதோஷம்தான். இந்த பிரதோஷத்தைத்தான் 'மஹாப்பிரதோஷம்" என்று அழைக்கிறோம். சனிக்கிழமை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். சனிபகவானால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும்.

கண்டிப்பாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :

வருடத்தில் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும். இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prathosa viratham


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->