வாகனம் வாங்க போறீங்களா? அதிர்ஷ்ட வாகன எண்ணை கணக்கிடலாம் வாங்க..!
LUCKY VEHICLE NUMBER USING NUMOROLOGY
அதிர்ஷ்ட வாகனம்
நமது வாழ்க்கையில் அன்றாட தேவைகளில் நம்முடைய வாகனமும் ஒன்றாகும். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணங்களும் வெற்றியடையக் கூடியதாக இருக்க வேண்டுமெனில் நமது கூட்டு எண்ணிற்கு நட்பு எண்ணாக அமையக்கூடிய வாகன எண்கள் கொண்ட வாகனங்களில் பயணம் மேற்கொள்வது நல்லதொரு அமைப்பாக அமையும்.
நம்முடைய கூட்டு எண்ணிற்கு நட்பு எண்ணாக வரக்கூடிய எண்களைக் கொண்ட வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது அப்பயணம் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
அந்த அதிர்ஷ்ட எண் கொண்ட வாகனம் வந்த நேரத்திலிருந்து வாகன விருத்தியும் ஏற்படும். ஆகவே ஒவ்வொரு எண்களும் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கக்கூடியதாகும்.
அதிர்ஷ்ட வாகன எண் கணக்கிடும் முறைகள் :
T N 3 6 A B 1 1 3 6
4 5 3 6 1 2 1 1 3 6 = 32
வாகனத்தின் எண் என்பது 5 ஆகும்.
T N 8 6 1 1 3 6
4 5 8 6 1 1 3 6 = 34
வாகனத்தின் எண் என்பது 7 ஆகும்.
வாகனத்தின் அதிர்ஷ்ட எண்ணை கணக்கிடும்பொழுது ஆங்கில எழுத்திற்கு கொடுக்கப்படும் எழுத்துக்களின் மதிப்பையும், வாகன எண்ணையும் கூட்டி அவ்வெண்ணிற்கு நட்பு எண்ணாக வரக்கூடிய பட்சத்தில் நமக்கு நன்மையை அளிக்கும்.
ஆங்கில எழுத்துக்களின் மதிப்பை கூட்டாமல் வாகனங்களின் மதிப்பெண் மட்டும் கூட்டுவது சரியானதன்று.
English Summary
LUCKY VEHICLE NUMBER USING NUMOROLOGY