திருவிழா... காவடியாட்டம் என்றால் என்ன? வகைகள் யாவை?! - Seithipunal
Seithipunal


காவடியாட்டம்:

காவடியாட்டம் சமய உணர்விற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. கரகாட்டத்தை போல காவடியாட்டம் நாட்டுப்புற ஆட்டக் கலையாகும். இது முருகன் வழிபாட்டிற்குரிய கலையாக திகழ்கிறது. எடை மிகுந்த பொருட்களை தண்டின் இரு முனைகளிலும் சமமாக கட்டி இறைவனை வேண்டி பாடி ஆடுவது காவடியாட்டம் ஆகும்.

காவடியாட்டம் என்றால் என்ன?

முருகன் வழிபாட்டில் சடங்காக நிகழ்த்தப்பட்டு வரும் காவடி எடுத்தல் சடங்கே பின்னாளில் காவடியாட்டம் என்ற கலைவடிவமாக மாறி வளர்ந்துள்ளது.

காவடியாட்டம் கா-என்பதற்கு பாரம் தாங்கும் கோல் என்பது பொருள். கோலின் இருமுனைகளிலும் சம எடையுள்ள பொருட்களை கட்டிய தண்டினை தோளில் சுமந்து முன்னும், பின்னும் இசைக்கேற்ப ஆடுவதே காவடியாட்டம் ஆகும்.

காவடியை உருவாக்குவது எப்படி?

ஒரு மரத்தண்டினை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மரத்தண்டின் இரு முனைகளிலும் மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக வைத்துக் கொள்வார்கள்.

அந்த அரைவட்ட பகுதியை துணியால் அலங்கரிப்பார்கள். மேலும் மயிலிறகு கற்றைகளை இருபுறமும் பொழியும் மணிகளால் அழகுப்படுத்தியும் காவடியை உருவாக்குகின்றனர்.

காவடியாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது?

காவடியாட்டத்தை ஆடுபவர் காவடியை தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார்கள். முருகன் கோவிலுக்கு சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்திக்கடன் வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர்கள் வரை பலரும் பங்கேற்பார்கள்.

இலங்கை, தமிழ்நாடு மற்றும் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாக காவடியாட்டம் இடம்பெறுகிறது.

காவடியாட்டம் ஆடும் கலைஞரின் திறன் வெளிப்பாட்டிற்கேற்ப அதாவது காவடியைத் தலையில் வைத்து ஆடுவது, கழுத்தில் வைத்து சுழற்றுவது, உடல்முழுக்க காவடியை நகர்த்தி செல்வது, வளைந்து வயிற்றில் வைத்து ஆட செய்வது போன்ற அசைவுகளின் மூலம் பார்வையாளர்களை கவரும் விதமாகவும் ஆடுகின்றன.

காவடியாட்டத்துக்கான இசை:

காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதஸ்வரமும், தவிலும் விளங்குகின்றன. நாதஸ்வரத்தில் காவடி சிந்து இசையை வாசிக்க காவடியாட்டம் ஆடுவது மரபு. தற்காலத்தில் ஆடுவதற்கு ஏற்றதாக அமையக்கூடிய சினிமா பாடல்களையும் நாதஸ்ரத்தில் வாசிப்பதை காணலாம்.

காவடியாட்டம் வகைகள்:

பால் காவடி, பன்னீர் காவடி, மச்ச காவடி, சர்ப்ப காவடி, பறவை காவடி, தூக்கு காவடி, கற்பூர காவடி, வேல் காவடி, வெள்ளி காவடி, தாள காவடி, பாட்டு காவடி, ஆபரண காவடி, தாழம்பூ காவடி, சந்தன காவடி, மிட்டாய் காவடி, தயிர் காவடி, தேன் காவடி, அக்னி காவடி, அபிஷேக காவடி, தேர் காவடி, சேவல் காவடி, சாம்பிராணி காவடி, மயிற்தோகை அலங்கார காவடி, ரத காவடி போன்றவை காவடியாட்ட வகைகள் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kavadiyattam special For Thiruvizha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->