தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் நாளை பட்டாபிஷேகம்.! - Seithipunal
Seithipunal


கார்த்திகை தீபத்திற்காக அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன் படி, திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இந்த விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு வேடத்தில் பக்தர்களுக்கு அருள் தாது வருகிறார்.

இந்நிலையில் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை 7 மணி அளவில் கோவிலில் உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. 

இதைதொடர்ந்து நாளை மறுநாள் காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்து சிறிய வைர தேரில் எழுந்தருளுவார். 

பக்தர்கள் வடம் பிடித்து சுவாமி ரத வீதிகள் வழியாக தேர் சுற்றி வந்த பின்னர் கோவிலை அடையும். இதையடுத்து, மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மேலும் கார்த்திகை தீபத் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karthikai deepam function tomarrow thiruparanguram murugan temple pattabishegam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->