மீதமுள்ள உணவு வீணா? 5 நிமிடத்தில் சூப்பர் டிஷ்...! - ஸ்மார்ட் கிச்சன் டிப்ஸ்!
Is leftover food going waste super dish 5 minutes Smart kitchen tips
வீட்டில் செய்த உணவுகள் சில நேரங்களில் மீதமாகி வீணாகிப் போய்விடும். ஆனால் கொஞ்சம் சிந்தித்தால், அதையே புதுச்சுவை கொண்ட ஸ்நாக்ஸ்களாகவும், இனிப்புகளாகவும் மாற்றலாம். ‘மீதம்’ என்றால் ‘வேஸ்ட்’ அல்ல… ‘நியூ டிஷ்’ உருவாக்கும் வாய்ப்பு தான்! இதோ சில சுவையான ஐடியாக்கள்:
சப்பாத்தி ஸ்னாக்ஸ்:
சப்பாத்தியை ரிப்பன் போல் வெட்டி எண்ணெயில் பொரித்து, உப்பு–காரம் தூவினால் மொறுமொறு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி!

சப்பாத்தி லட்டு ஸ்வீட்:
மீதமுள்ள சப்பாத்தியை பொடித்து, நெய், முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து உருட்டினால், சத்தான கோதுமை லட்டு – குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் இனிப்பு.
பிஸ்கட் ஐஸ்கிரீம் ட்ரீட்:
குட்டீஸ்க்கு வாங்கிய பிஸ்கட்டுகள் மெலிந்து விட்டதா? கவலை வேண்டாம். அவற்றை மிக்சியில் பொடித்து, பால், சர்க்கரை, கிரீம், முந்திரி சேர்த்து கலக்கி பிரிட்ஜில் வைத்தால் சுவையான ஹோம் மேட் ஐஸ்கிரீம் ரெடி!
உப்புமா சாண்ட்விச் ஸ்பெஷல்:
காலையில் மீதமான ரவை உப்புமாவில் கொஞ்சம் கரம் மசாலா தூவி, பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து டோஸ்ட் செய்தால், மாலை டீக்கு சூப்பர் சாண்ட்விச்.
காய்கறி துவையல் ட்விஸ்ட்:
மீதமுள்ள கறி வகைகளை சீரகம், வெங்காயம், தக்காளி வதக்கி சேர்த்து அரைத்தால், அருமையான துவையல் தயாராகும். இட்லி, தோசை, சப்பாத்திக்கு செம்ம சைட் டிஷ்.
சிறிய யுக்திகள்… பெரிய சுவை! இனி மீதமுள்ள உணவுகள் எல்லாம் உங்கள் கிச்சனில் ‘புதிய ரெசிபி’ ஆக மாறட்டும்
English Summary
Is leftover food going waste super dish 5 minutes Smart kitchen tips