விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான வழிமுறைகள்- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்..! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான வழிமுறைகள்- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்..!

நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. 

* அதாவது, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில்  மிகவும் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

*  சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒருமுறை பயன்படுத்தும், தெர்மாகோலால் ஆன பொருட்களை அனுமதிக்க கூடாது. 

* மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்த கூடாது என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Instructions for celebrating Ganesha Chaturthi- Pollution Control Board information..! Open in Google Translate •


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->