குலதெய்வம் தெரியவில்லையா? நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இதுதான்.! - Seithipunal
Seithipunal


நமது குலத்தினை காக்கும் தெய்வம், தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிட முடியாதது.

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒருவர் தன்னுடைய இஷ்ட தெய்வத்தையோ, மற்ற பிற தெய்வங்களையோ வணங்கலாம்... வணங்காமலும் போகலாம்... 

ஆனால் குலதெய்வத்தை ஆண்டிற்கு ஒரு முறையாவது அந்த தெய்வம் இருக்கும் இடத்திற்கு சென்று வழிபட்டு வர வேண்டியது முக்கியமானது. ஆனால் பலருக்கும் தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பதே துரதிஷ்டம் தான்.

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கையை தேடி இருப்பார்கள்.

இதனால் சுமார் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக குலதெய்வம் கோவிலுக்கு செல்லாததாலும், அதைப்பற்றி பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தாத காரணத்தாலும் பிற்கால சந்ததியர் தங்களின் குலதெய்வத்தையே மறந்திருப்பார்கள் அல்லது குலதெய்வம் தெரியாமல் இருப்பார்கள்.

அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வரும்போது குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று நினைத்தால் அது முடியாமல் போய்விடும். இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

அப்படிப்பட்டவர்கள் எப்படியாவது தங்களின் குலதெய்வத்தை கண்டறிய வேண்டியது அவசியம் என்றாலும் அதுவரை குலதெய்வமாக தமிழ் பெரும் கடவுளான முருகப்பெருமானை வழிபட்டு வருவது நன்மையை அளிக்கும்.

திருச்செந்தூர் முருகன் :

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். பெரும்பாலான முருகப்பெருமானின் தலங்கள் குன்றின் மீது அமைந்திருக்கும். ஆனால் கடற்கரையோரம் அமைந்த திருத்தலமாக வேறுபட்டு நிற்பது திருச்செந்தூர் திருத்தலம்.

சூரபத்மனை வதம் செய்து வெற்றி வீரனாக வீற்றிருக்கும் செந்தில் ஆண்டவரை குலதெய்வம் தெரியாதவர்கள் தங்களின் குலதெய்வமாக நினைத்து கொண்டு வழிபட்டு வரலாம். இதன் மூலம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடைய முடியும்.

மேலும் திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

திருச்செந்தூர் குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.

வேறு தெய்வங்கள் :

இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடுள்ளது என்று பாருங்கள்.. பரம்பரையாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது.

அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்ப சாமியோ, முனியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... குலதெய்வமாக வணங்கலாம்.

குறிப்பாக குலதெய்வம் தெரியாதவர்கள் அண்ணாமலையாரை குலதெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள் மகாலிங்கத்தை குலதெய்வமாக வழிபடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

if u dont know your family god u should pray that 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->