தைப்பூசத்தில் எப்படியெல்லாம் விரதம் இருக்க வேண்டும் - இதோ முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் வரும் தை மாதம் என்பது ஒரு தெய்வீக மாதமாகும். காரணம் இந்த தை மாதம் பிறக்கும் நாளன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தைப்பூசம் கொண்டாடப்படும். பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வருகிற தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நாள் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும். 

இந்த நன்னாளில், பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். அப்படி உள்ளவர்களுக்கு விரதம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் காண்போம். தைப்பூசத்தன்று நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. 

இந்த விரத நாளில் காலை, மதியம் என்று இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகச் சிறந்தது. முருகனை வழிபடும் நேரத்தில் முருகனுடைய வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது. 

முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். அதாவது, மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பார்கள். இந்த தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது. 

மேலும், வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது மிகுந்த விசேஷசமாகும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to fasting in thaipoosam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->