இன்றும் முதல் அத்திவரதர் தரிசன முறையில் புது மாற்றம்., தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் 19வது நாளான இன்று அத்திவரதர் நீலவண்ணப் பட்டடை  கொண்டும், வெட்டிவேர் மாலை, ஏலக்காய் மாலை உள்ளிட்டவை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

19 வது நாளான இன்று மதிய நிலவரப்படி சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் தரிசனத்துக்கு வரிசையில் நின்று காத்து கிடக்கின்றனர். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் மேற்கு ராஜகோபுரம் மற்றும் நிழல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஓய்வெடுக்கும் நிலையில் நெரிசலை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அவர்களை போலீசார் வெளியேறி வருகின்றனர்.

பொது தரிசனத்துக்கு வருபவர்களை தரிசிக்க விடாமல் வி.ஐ.பி. தரிசனத்துக்கு வருபவர்கள் மறைப்பதாகவும் அதனால் தாமதம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் வி.ஐ.பி.தரிசனத்துக்கு வருபவர்கள் அத்திவரதரை வணங்கி விட்டு கடந்து செல்வதற்கு பதில் பொது தரிசன வரிசை மறைக்காமல் வந்த வழியில் திரும்பிச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவில் அருகே ஏற்கனவே 250 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீட்பு பணிகளுக்காக கூடுதலாக  150 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார் அதுபோல் குடிநீர் வழங்குதல் புதியவர்களை தரிசனத்துக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளை ஏற்கனவே 500 பேர் இருந்த நிலையில் தற்போது 2000 பேர் பணியில் உள்ளனர். கோயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பேருந்துகள், கார்கள் அனுமதிக்கப்படாமல் ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில் நடந்து முடிந்த 18 நாட்களில் மொத்தம் 28 லட்சத்து மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

changes in athivarathar temple visit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->