இன்றைய (23-08-2019) ராசிபலன்கள்: இந்த ராசிக்காரர்களுக்கு, அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது.! - Seithipunal
Seithipunal


மேஷம்:

பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன்  வெளியூர் பயணம் செல்வதற்கான சூழல் உருவாகும். பொருளாதாரம் மேம்படும். வியாபாரம் சம்பந்தமான  பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

ரிஷபம்:

உறவினர்களின் ஆதரவால் இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் தோன்றும். தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய இலக்கு தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தள்ளிப்போன சில பயணங்கள் கைகூடும்.

மிதுனம்:

உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.  உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

கடகம்:

மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்த முயல்வீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

தொழில் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு, நினைவாற்றல் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன செயல்களை தற்போது செய்து முடிப்பீர்கள்.

கன்னி:

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய அளவில் இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

துலாம்:

மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தாங்களே பணிகளை மேற்கொள்வது நல்லது. வெளி இடங்களில் நிதானம் வேண்டும். கருத்துக்களை பரிமாறும் போது பொறுமையுடன் செயல்படவும்.

விருச்சகம்:

தொழில் தொடர்பான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழல் உருவாகும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு:

பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். புனித தலங்களுக்கு செல்வதினால் மனத்தெளிவு கிடைக்கும்.

மகரம்:

கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். வாரிசுகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்:

சுபச் செயல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிடைக்கும்.  கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். பெண்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு முயற்சிக்கேற்ற பலன்கள் உண்டாகும்.

மீனம்:

நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். தாய்மாமனிடம் விட்டுக்கொடுத்து செல்வதால் இன்னல்கள் குறையும். தவறிய சில கோப்புகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

august 23 rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->