இன்று... இந்த ராசிக்காரர்களுக்கு முயற்சிகள் கைகூடும் நாள்... இது உங்கள் ராசியா? - Seithipunal
Seithipunal


மேஷம்:

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  எதிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடித்து பாராட்டப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும்.

ரிஷபம்:

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்:

மனதில் வீண் கவலையும், சோர்வும் உண்டாகும். புதுவிதமான யோசனைகள் தோன்றும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.  மறைமுக தடைகளை தகர்த்து வெற்றி காண்பீர்கள். செய்யும் பணிகளில் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவது மேன்மையை தரும். 

கடகம்:

நீண்ட நாள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளால் பணத்தேவை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். 

சிம்மம்:

பணியில் இருந்த எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.  உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும். விளையாட்டில் சாதனை புரிவதற்கான சூழல் அமையும்.

கன்னி:

அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் இனிதாக நடந்து முடியும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் வசூலாகும்.  

துலாம்:

உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். பழைய கடன்களை குறைப்பதற்கான தனவரவு உண்டாகும். உடல்  சோர்வு நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்ப பெரியோர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.

விருச்சகம்:

எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மையை அளிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும்.

தனுசு:

நண்பர்களிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி நட்பு மலரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்த ஒருவிதமான தயக்கம்  நீங்கும்.

மகரம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதற்கு முன் சிந்தித்து செயல்படவும். பழைய பாக்கிகள் வசூலாவதில் காலதாமதம் நேரிடலாம்.

கும்பம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படலாம். எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்:

குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான நிலை காணப்படும். வாகன சேர்க்கையால் மகிழ்ச்சி பிறக்கும். நீர்நிலை சம்பந்தமான தொழில்களில் இலாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். இறைவழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apr 01 rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->