நீங்காத கண் திருஷ்டியா?... உடனடியாக தீரும் ஆன்மீக பரிகாரங்கள்!  - Seithipunal
Seithipunal


ஒருவருக்கு கண் திருஷ்டி தாக்கினால் நோய், வருமை போன்றவை ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும் கோவிலில் சென்று கேட்டால் கண் திருஷ்டி போக சில பரிகாரங்களை செய்ய சொல்வார்கள். எளிமையான பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும். கண் திருஷ்டி பிரச்சனை தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

* முதலில் பரிகாரத்திற்கு தேவையான ஒரு பொருள் படிகார கல். ஒரு படிகார கல்லை வாங்கி வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றீர்களோ அதனை துண்டுகளாக உடைத்து வைக்க வேண்டும். இதை இரவு தூங்குவதற்கு முன்பு பூஜை அறையில் வைத்து வாராகி அம்மனை மனதார நினைத்து குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி எல்லாம் நீங்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். 

பிரார்த்தனை முடிந்த பிறகு தூங்கச் செல்லும்போது அவரவர் தலையணைக்கு அடியில் இருக்கும்படி படிகார கற்களை வைத்து தூங்க வேண்டும். மறுநாள் காலை எழுந்து எல்லா பரிகாரங்களையும் வீட்டிற்கு வெளியில் நெருப்பில் போட்டு பொசிட்டி விடலாம் அல்லது ஆறு ஓடை போன்ற நீர் நிலைகளில் விட்டு விடலாம். 

* சிவப்பு நிற துணியை விரித்து அதில் மூன்று பல் பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் சாம்பிராணி பவுடர், ஒரு துண்டு அடுப்புக்கரி ஆகியவற்றை சேர்த்து முடிச்சு போட்டு கட்டிக் கொள்ளுங்கள். 

பின்பு அதை உங்கள் தலைவாசல் படியில் கட்டி தொங்க விட்டால் கண் திருஷ்டி நீங்கும். இது யாருடைய கைகளிலும் தலையிலும் உரசக்கூடாது. சூரியன் மறைவதற்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இதனை செய்வது நல்லது. இதனை செய்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். 

* மற்றொரு பரிகாரத்திற்கு வெண் கடுகு தேவை. இது கடவுள் தன்மை கொண்ட பொருள். வீட்டில் பூஜை செய்யும் பொழுது கண் திருஷ்டி நீங்க வேண்டும் என வேண்டி பூஜை அறையில் சாம்பிராணியை இயற்றி வைத்து அந்த தூபத்தில் வெண்கடுகை போட்டு வீடு முழுவதும் புகையை காட்டினால் தீய சக்திகள் அனைத்தும் நீங்கிவிடும். 

இதனுடன் மருதாணி விதையை சேர்த்தாலும் நன்மைகள் அதிகரிக்கும். வீட்டிற்கு வருபவர்கள் பார்க்கும் படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பூக்களை மிதக்க விடலாம். பூக்கள் கண் திருஷ்டியை ஈர்த்துக் கொள்ளும். சக்தி கொண்டுள்ளது வீட்டு வாசலில் செடிகள் வைக்கின்றவர்கள். வெறும் அலங்கார செடிகளை வைக்காமல் ரோஜா செடி வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முற்கல் இருப்பதால் முள் செடிகள் கண் திருஷ்டியை போக்கிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aanmeega thagavalgal kan drishti parikaaram


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->