2023 புத்தாண்டு சிம்மராசிக்கு எப்படி இருக்கும்.?! ஆரம்பமே அமர்க்களமாகும்..!  - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் 2023 புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என பார்க்கலாம். 

இந்த ஆண்டு எடுக்கின்ற முயற்சியில் நினைத்த பலன் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். 

வெளியூர்களிலிருந்து உற்சாக செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியம் சார்ந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை உண்டாகும். அத்துடன் தாய் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு குறித்த செலவுகள் ஏற்படலாம். 

மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறையக்கூடும். நண்பர்களுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். சஞ்சலமான யோசனைகளினால் உடல் சோர்வு ஏற்படலாம்.

கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பணிகளில் இதுவரை இறந்து வந்த அலட்சியம் நீங்கி முயற்சிகள் கைகூடும். 

வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி கூட்டாளிகளுடன் ஒற்றுமை ஏற்படும். அபிவிருத்தி குறித்த அனைத்து முயற்சிகளும் கைகொடுக்கும். மனதில் ஆரோக்கியமான சிந்தனைகள் தோன்றும். எளிமையான செயல்பாடுகளால் கடினமான விஷயங்களைக் கூட ஈசியாக செய்ய முடியும்.

முடிந்த அளவு தனிமையில் இருப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளிடம் கவனம் வேண்டும். பெற்றோர்களிடம் அன்புடன் இருங்கள். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 rasi palan For simmarasi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->