தினம் தினம் திருநாளே... இன்றைய தினம் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணி மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்:

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

மிதுனம்:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சுதந்திரப்போக்கு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கடகம்:

உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் வித்தியாசமான சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாகும். குழந்தைகளின் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

கன்னி:

செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த சிந்தனைகளில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் சேமிப்பு மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

துலாம்:

வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்:

தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வாழ்க்கை துணைவர் வழியில் உதவி கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

தனுசு:

உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்:

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். திருப்தி நிறைந்த நாள்.

கும்பம்:

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் நீங்கும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.

மீனம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். ஆன்மிக வழிபாடு மற்றும் பயணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

06 apr rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->