இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.. இன்றைய (04-09-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

உடன்பிறந்தவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவுபெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

ரிஷபம்

பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழிலில் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் மேம்படும். வெளிவட்டாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம்

சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயணங்களில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். உற்சாகம் வேண்டிய நாள்.

சிம்மம்

வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

கன்னி

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். பத்திரம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். போட்டி தேர்வுகளில் சிந்தித்து செயல்படவும். செல்வாக்கு மேம்படும் நாள்.

துலாம்

எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அமைதி வேண்டிய நாள்.

விருச்சிகம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகள் மேம்படும் நாள்.

தனுசு

நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஊக்கம் வேண்டிய நாள்.

மகரம்

உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சில தந்திரமான சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசித்து சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். அமைதி வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

04.09.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->