அதே ஸ்டைல் அரசியல்.. மான்கறி சம்பவத்திற்கு குடும்பத்திற்கே கொலை மிரட்டல்.. ரவுடிகளின் கூடாரம்?..!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி திட்டமிடப்பட்ட திரைத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டார். இதன்பின்னர், பல படங்களில் நடித்து இருந்த நிலையில், மக்கள் மத்தியில் ஸ்டாலினின் மகன் என்ற அடையாளத்தை பெற்றவுடன் அரசியலில் களமிறக்கப்பட்டார். 

இதனையடுத்து பல திமுக பொதுக்குழுவில் பரபரப்பாக பேசிய நிலையில், சிறுபிள்ளைக்கு அறிவார்ந்த அறிவுரையை கூறாமல் தாத்தா தொலைக்காட்சி தந்தார், அப்பா செட் ஆப் பாக்ஸ் தருவார், நான் ரிமோட் தருவேன் என்பதை போல பேசி இருந்தார். 

இந்த நிலையில், இவர் முன்னதாகவே #உதயமானபேபி என்ற ஹேஸ்டேக்கில் நடிகை விவகாரத்தில் சிக்கினார். பின்னர் அந்த நடிகையை மிரட்டி அமைதியாக வைத்ததாக பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இது போன்று பல பிரச்சனைகளில் சிக்கியுள்ள நிலையில், தற்போது மான் கறி விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்த மான்கறி விவகாரத்தில், உண்மையை கூறிய சதாசிவம் என்ற நபரை திமுக பிரமுகர்கள் மிரட்டி வருகிறார்கள் என்றும் தெரியவருகிறது. சதாசிவம் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகராக இருந்து வரும் நிலையில், மான்கறி விஷயத்தில் உண்மையை கூறியதற்காக அவரை கொலை செய்யவும் திமுக ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது. 

இந்த விஷயம் தொடர்பான காணொளிகள் தனியார் யூ டியூப் சேனலில் வெளியாகி, இணையதள நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை வெளிக்கொணரும் பொருட்டு #SaveSathasivamFromDMKkillers என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் தலத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 


Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social Media Trend about SaveSathasivamFromDMKkillers for Udhayanidhi


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->