சமூகவலைத்தளங்களுடன் ஆதார் என்னை இணைக்க கோரிய வழக்கு, நீதிபதி பரபரப்பு தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஆதார், பான் எண்களை   ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள கணக்குகளுடன் இணைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ட்விட்டர், பேஸ்புக் இருக்கும் கணக்குகளில் 20 சதவிகிதம் போலியானவை என்றும், எனவே போலியான கணக்குகளை கண்டுபிடித்து நீக்க ஆதார், பான் எண்களை சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சமூக வலைதள கணக்குகளுடன், ஆதார், பான் அல்லது பிற அடையாள ஆவணங்களை இணைக்க வேண்டும் என நீதிமன்றத்தால் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், இதற்கான கொள்கைகளையும், சட்டத் திருத்ததையும் மத்திய அரசுதான் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

20 சதவிகித போலி கணக்குகளை கண்டுபிடிக்க உண்மையான கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள்  இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேலும், அனைத்து தகவல்களும் வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால், ஆதார், பான் எண்களை சமூக வலைதள கணக்குகளுடன் இணைப்பதற்கான விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media link with aadhar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->