செம்பருத்தி டீ சர்ச்சை! முட்டாளுடன் வாதிடக் கூடாது!நடிகை நயன்தாரா! - Seithipunal
Seithipunal


முட்டாளுடன் வாதிடக் கூடாது. உங்களை அந்த முட்டாள்கள் அவர்கள் தரத்துக்கு கீழ இழுத்து செல்வார்கள் என நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா தீவிரமாக இறங்கி வருகிறார். அவர் சமீபத்தில் தினந்தோறும் காலை வேளையில் செம்பருத்தி டீ யை அருந்துவது உடலுக்கு நல்லது. செம்பருத்தி டீ யை அருந்துவதால் சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்லது என்ற பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவை பார்த்த பிரபல மருத்துவர் ஒருவர் செம்பருத்தி டீ யின் மருத்துவ குணங்கள் குறித்து நயன்தாரா சொல்லி இருக்கும் விஷயங்கள் நிரூபிக்கப்படாதவை. பொய்யான தகவலை வெளிப்படுத்தி  உள்ளார்.

செம்பருத்தி டீயை தினமும் குடித்தால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும். தன்னை பின் தொடரும் ரசிகர்களை நடிகை நயன்தாரா தவறாக வழி நடத்துகிறார் என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது பலரும் சமூக வலைதலைப் பக்கத்தில் இது குறித்து கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளதாவது, முட்டாளுடன் வாதிடக் கூடாது. முட்டாள்கள் உங்களை அவர்கள் தரத்துக்கு கீழே இழுத்து செல்வார்கள். பிறகு அனுபவத்தால் உங்களை தோற்கடிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

no argue with a fool Actress Nayantara said those idiots will drag you down to their level


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->