நெட்டிசன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி., உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்கு வைத்திருப்போர் தங்களது ஆதார் எண்ணையும் அத்துடன் இணைக்க வேண்டும் என அஸ்வின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இது முற்றிலும் பயனாளர்களின் தனியுரிமையை பாதிக்கும் செயல் என பேஸ்புக் நிர்வாகம் நீதிமன்றத்தில் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தது.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் ஆகியவற்ற அனைத்தையும் பேஸ்புக் நிறுவனமே வழங்குவதால் சமூக வலைதளத்தின் எந்தப் பக்கத்தில் கணக்கு இருந்தாலும் ஆதார் எண் இணைப்பு அவசியமாகிப் போகும். இவ்விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட அஸ்வின் தரப்பு, போலி செய்திகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், தீவிரவாதப் பதிவு எனப் பல அபாயங்களை அரசு கண்டறிய வசதியாய் இருக்கும் பொது நல வழக்கு தொடரிந்த அஸ்வின் தரப்பில் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் மட்டுமல்லாது காவல் ஆணையருக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் வரும் செப்டம்பர் மாதம் பதிலளிக்க கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, சமூகவலைத்தளங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிபதிகள் உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new judgement in about social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->