வாட்ஸப்பில் வந்துடுச்சு புதிய அப்டேட் - இனி உங்க அனுமதி இல்லாம இத பண்ணவே முடியாது.!!
metta new update in whatsapp
ஸ்மார்ட் போன்கள் தேவை அதிகரித்ததால் பலரும் சமூக ஊடக செயலிகளை பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, வாட்ஸ்அப் செயலி பயனர்களின் அன்றாட தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியமான தளமாக அமைந்துள்ளது.
இந்த வாட்ஸாப் மூலம் அதிகளவில் மோசடிகளும் நடைபெறுவதால் இதன் தாய் நிறுவனமான மெட்டா அவ்வப்போது பல புது புது அப்டேட்டுகளைக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, வாட்ஸாப் பயனர்கள் தானாகவே தெரியாத குரூப்புகளில் சேர்க்கப்பட்டு வருவது பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு கான மெட்டா நிறுவனம், தற்போது புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர் தெரியாத குரூப்பில் சேர்க்கப்பட்டால், “Safety Message” எனப்படும் பாதுகாப்பு அறிவிப்பு ஒன்று வரும். இந்த அறிவிப்பில், அந்த குரூப்பின் பெயர், உருவாக்குநர், உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் வழங்கப்படும். பயனர்கள் இதனை பார்த்து அந்த குரூப் நம்பிக்கைக்குரியது தான் என உறுதி செய்த பிறகு அதில் தொடர முடியும்.
வாட்ஸப்பில் வந்துள்ள இந்த புதிய அப்டேட் தானாக சேர்க்கும் மோசடி குரூப்புகள், ஸ்பாம்கள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளை தடுக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
English Summary
metta new update in whatsapp