பக்கா திட்டத்துடன் களமிறங்கிய புள்ளிகள்.. மவுனத்தில் தலைமை.. பரபரப்பு தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு கட்சியின் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும், தன்னார்வலர்கள் சார்பாகவும் பல உதவிகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ்.அழகிரி தனது சொந்த மாவட்டத்தை தவிரித்து எங்கும் செல்லவில்லை. பிற மாவட்ட மக்களுக்கு தேவையான உதவியை, கட்சி நிர்வாகிகள் செய்துகொள்ளுங்கள் என்று கூறி வீட்டிலேயே இருந்து வருகிறார். 

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரத்தின் மகன் மற்றும் சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்.பிக்களுடன் சேர்ந்து மக்களுக்கு நிவாரண உதவியை செய்து ராகுல் காந்திக்கு புகைப்படம் வாயிலாக விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக காங்கிரஸ் வட்டாரத்தில் கே.எஸ்.அழகிரி குறித்த கேள்விகள் தொடர்ந்து எழத்துவங்கிய நிலையில், இப்படி உதவி செய்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற கார்த்திக் சிதம்பரம் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. 

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு தனது திருச்சி தொகுதி மட்டுமல்லாது பிற தொகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், திருநாவுக்கரசை பதவியில் இருந்து நீக்கி, கே.எஸ் அழகிரி தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

கொரோனாவின் எதிரொலி காரணமாக கே.எஸ்.அழகிரி வீட்டிலேயே இருக்கும் நிலையில், இந்த சூழ்நிலைதான் விட்ட பொறுப்பை மீண்டும் கைப்பற்ற முடியும் என்று ஒரு தரப்பும், புதிதாக பதவியை பிடிக்க மற்றொரு தரப்பும் முயன்று வருவதாக தெரியவருகிறது. எப்படியோ மக்களுக்கு உதவி செய்தால் நல்லதுதான்.. இல்லை உள்ளூர் ஆட்களை போல எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்து, பேருக்கு புகைப்படம் எடுத்து, மக்களின் புகார் என்று தலைமை செயலகம் வரை அனுப்பி வைத்து, பெரிய பல்பாக மக்களுக்கு கொடுக்காமல் இருந்தால் சரிதான்.

எந்த கட்சியாக இருந்தாலும் சரி, நல்ல தலைவன் மற்றும் தொண்டனுக்கு அழகாக தலைவன் இருக்கிறாரோ இல்லையோ, அவரது ஆணைக்கிணங்க மக்களுக்கு நிர்வாகிகள் உதவி செய்வதே தலைமையின் வெற்றி. அதுவே மக்களின் மனதில் நீங்காத இடத்தை தக்கவைக்க உதவி செய்யும் என்பதே நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress tamilnadu party members cold fight to leader post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->