இன்ஸ்டாகிராமில் மெசேஜ்! நடுரோட்டில் வைத்து நாடக காதல் ரோமியோவை செருப்பால் அடித்த பெண்! - Seithipunal
Seithipunal


தனக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுந்செய்தி அனுப்பியவனை தேடி கண்டுபிடித்து, நடுரோட்டில் செருப்பால் அடித்துள்ளார் ஒரு பெண்.

ஆந்திர மாநிலம் : இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுந்செய்தி அனுப்பிய நாடக காதல் ரோமியோவை செருப்பால் அடித்த பெண் குறித்த காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நெல்லூர் மாவட்டம், காவலியில் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை
செய்து வருபவர் கல்யாண். 

சம்பவம் நடந்த இன்று காலை கல்யாண் பணிபுரியும் கடைக்கு வந்த பெண்
ஒருவர், கல்யான் சட்டையை பிடித்து தரதரவென கடையிலிருந்து வெளியில் வரவழைத்து திடீரென்று செருப்பால் அடிக்க தொடங்கினார்.

இதனை பார்த்த பொதுமக்கள் என்ன எது என்று புரியாமல் அதிர்ச்சி அடைந்து அந்த
பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர். 

ஆனால், ஆவேசம் கொண்ட அந்தப்பெண் கல்யானை சரமாரியாக செருப்பால் அடித்துக்கொண்டே இருந்தார்.

பொறுமை இழந்த மக்கள் ஏன் அவரை அடிக்கிறீர் என்று கேட்க, அதற்க்கு அந்த பெண் மீண்டும் கல்யானை அடிப்பதை நிறுத்தாமல், "இவன் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பினான். அதான் இவனை செருப்பால அடிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அந்த பெண்ணிடமிருந்து தப்பி ஓடினர் கல்யாண், பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் கல்யானை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andhra insta romia case


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->