போட்டோ எடுத்தது குத்தமாடா?.. மணமேடையில் போட்டோ கிராபருக்கு பளார்.. வயிறு வலிக்க சிரித்த மணப்பெண்..! 
                                    
                                    
                                   a Photographer Attack by Bride man when takes photo on Reception Spot 
 
                                 
                               
                                
                                      
                                            போட்டோகிராபர் பெண்ணை மட்டும் அதிகளவில் போட்டோ எடுத்ததால், ஆத்திரமடைந்த மணமகன் மேடையிலேயே தாக்கிய நிலையில், இதனை சற்றும் எதிர்பாராத மணமகள் விழுந்து சிரித்தது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 
திருமணங்கள் என்றாலே ஆரவாரத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்கிறது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளின் போதும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளின் போதும், தம்பதிகளின் ஜோடிப்பொருத்தத்தை இறுதிவரை காண்பிக்க போட்டோ உதவி செய்கிறது. 

இன்றைய நாட்களில் விதவிதமான போட்டோ சூட் நடைபெற்று வருகிறது. இதில், சில சர்ச்சையையும் சந்திக்கிறது. இந்நிலையில், வீடியோ இணையத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோ காட்சியில், மணமக்கள் மேடையில் நின்று கொண்டு இருக்கிறார்கள். 
அங்கு, போட்டோகிராபர் முதலில் தம்பதிகளை புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில், பின்னர் மணப்பெண்ணை பல விதமான முக பாவனையுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். ஒரு சமயத்தில், இதனைக்கண்டு ஆத்திரமடைந்த மணமகன், போட்டோ கிராபரை மேடையிலேயே வைத்து அடிக்கிறார்.  இதனை சற்றும் எதிர்பாராத மணப்பெண், கீழே விழுந்து சிரிக்கும் வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. 
 Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       a Photographer Attack by Bride man when takes photo on Reception Spot