காலக்கொடுமை || மகன் அமெரிக்காவில்., தந்தை தொடுத்த பரபரப்பு வழக்கு.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் : ஹரிதுவாரில் பிரசாந்த் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரின் மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது மகன் மற்றும் மருமகளுக்கு எதிராக உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் பிரசாந்த் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

அவரின் அந்த புகார் மனுவில், "எனது உழைப்பை பணமாக்கி மகனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். பேரக்குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தான் என் மகனுக்கு கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் செய்து வைத்தோம். 

எங்கள் பேரக்குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பற்றி கவலைப்படவில்லை. எங்களுக்கு ஒரு பேரக்குழந்தை மட்டும் தான் தேவை. 

மேலும், பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட வகையிலும் நானும் எனது மனைவியும் சிரமப்படுகிறோம். வங்கியில் கடன் வாங்கிதான் வீடு கட்டினேன். என்னிடம் இப்போது பணம் இல்லை. எனவே, என் மகன் மற்றும் மருமகளிடம் இருந்து தலா 2.5 கோடி ரூபாய் இழப்பீடாக கேட்டு இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எனது மனுதாரரின் இந்த வழக்கு நம் சமூகத்தின் உண்மையை பிரதிபலிக்கிறது. 

நாம் தங்கள் குழந்தைகளுக்காக அனைத்தையும் முதலீடு செய்கிறோம். பெரும் நிறுவனங்களில் பணி செய்யும் திறனை அவர்களுக்கு உருவாக்கி கொடுக்கிறோம்.

எனவே, பிள்ளைகள் பெற்றோருக்கு அடிப்படை நிதியுதவி வழங்க வேண்டும். ஒரு ஆண்டுக்குள் பேரக்குழந்தை அல்லது 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று பிரசாந்த் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

uttarakhant father case against his son


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->