ஒரு மாணவனுக்காக சாலையில் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிட்ட இரு மாணவிகள்.!! - Seithipunal
Seithipunal


ஒரு மாணவனுக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டை காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபள்ளி பகுதியை சேர்ந்தவர் மாணவன் வெவ்வேறு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளின் ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த புதன்கிழமை காலை மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்வதற்காக விசாகப்பட்டினம் ஆர்.டி.சி பேருந்து நிலையத்தில் வந்தனர். 

அப்போது 2 பள்ளி மாணவிகள் மாறி, மாறி திட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு அருகில் ஒரு பள்ளி மாணவன் நின்று கொண்டிருந்தார். இந்த பெண்களை கிடைக்க வாக்குவாதம் முற்றியதால், சுற்றி இருந்த சக மாணவர்கள் அங்கு என்னதான் நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தனர். ஒரு கட்டத்தில் அந்த பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு, ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இரு மனைவிகளும் காதல் விவகாரத்தால் மோதிக் கொண்டதால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் 2 மாணவிகளையும், அந்த மாணவனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது விசாகப்பட்டினம் அனகாபள்ளி பகுதி சார்ந்த மாணவன் ஒரே நேரத்தில் வெவ்வேறு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 2 மாணவியை காதலித்து வந்தது தெரிய வந்தது. அந்த மாணவன் காதலி ஒருவருடன் சாலையில் நடந்து செல்வதை பார்த்த மற்றொரு காதலி அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two girls fighting for one boyfriend video


கருத்துக் கணிப்பு

அதிமுகவின் ஒற்றை தலைமை உங்கள் சாய்ஸ் யார்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுகவின் ஒற்றை தலைமை உங்கள் சாய்ஸ் யார்?
Seithipunal