ஓட ஓட மனைவியை துரத்தி கணவன் செய்த கொடூர செயல்!! கம்பம் அருகே பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அண்ணா நகர் பேச்சியம்மன் கோவிலைச் சேர்ந்த சின்னத்துரை(52) என்பவரது மனைவி மயில்(45) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். 

சின்னத்துரை மற்றும் இவருடைய மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவந்துள்ளது. இதன்காரணமாக, கடந்த 6 மாதங்களாக சின்னத்திரையின் மனைவி அவர்களது மகள் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், மயில் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள மகள் தேவயானி வீட்டிலிருந்து கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். 

அதே போல இன்றும் கருநாக்கமுத்தன்பட்டி செல்ல கம்பம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.அப்போது அவரை கணவர் சின்னத்துரை பின் தொடர்ந்து வந்துள்ளார். மயிலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர் தகராறு முற்றவே தான் மறைத்து வைத்திருந்து அரிவாளை எடுத்து மயிலை வெட்ட முயன்றுள்ளார். இதனில், அச்சமடைந்த மயில் அங்கிருந்து தப்பித்து ஓடி ஒரு கடைக்குள் ஒளிய முயன்றுள்ளார். 

அப்போது அவரை துரத்தி வந்த சின்னதுரை கடைக்குள் நுழைந்து அவரை வெட்டியுள்ளார். இதில் மயிலின் 3 விரல்கள் துண்டாகியுள்ளது. பொய்ந்தனர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இது குறித்து போலீசார் சின்னதுரைரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். 

English Summary

A man murdered his wife in bus stand


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal